களனி சக்தி மின்னிணைப்புத் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி
Published On 16/09/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
பொறியியற்பீடம், அறிவியல்நகர், கிளிநொச்சி
களனி சக்தி மின்னிணைப்புத் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி
மின்னிணைப்புத் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறியினை களனி கேபிள்ஸின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியற்பீடம் தமிழ் மொழியில் நடாத்த திட்டமிட்டுள்ளது. இக்கற்கை நெறியின் பிரதான நோக்கம் மின்னிணைப்பு செயல்முறை தொடர்பான தத்துவ விளக்கங்களை வழங்குவது. எனவே மின்னியல் தொழில்நுட்ப துறையில் முன் அனுபவம் உள்ளோர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம் .
காலம் : ஒரு வருடம் (பகுதிநேரம்: மாதத்தின் முதலாவது சனி, ஞாயிறு தினங்களில் மட்டும்)
தெரிவு : நேர்முகப்பரீட்சை மூலம்
இடம் : பொறியியற்பீடம், அறிவியல்நகர், கிளிநொச்சி
மேற்படி கற்கைநெறியினை பயில்வதற்காக பொருத்தமான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 04.10.2026 வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
பொருத்தமான விண்ணப்பதாரிகள் தங்களது சுயவிபரக்கோவையினை கீழுள்ள முகவரிக்கு விண்ணப்ப முடிவு திகதியன்றோ அதற்கு முன்னதாகவோ கிடைக்கக் கூடியதாக பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்கவும் முடியும் (சுயவிபரக்கோவையில் மின்னிணைப்பு துறையில் தொழில் செய்த சேவைக்காலம், சேவை விபரம், தொலைபேசி எண், முகவரி என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்).
ஒருங்கிணைப்பாளர்,
‘மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி’
மின் மற்றும் மின்னணு பொறியியற்துறை,
பொறியியற்பீடம்,
அறிவியல்நகர்,
கிளிநொச்சி.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘மின்னிணைப்பு தகைமைச்சான்றிதழ் கற்கைநெறி’ எனக்குறிப்பிடுதல் வேண்டும். தெளிவற்ற மற்றும் விண்ணப்ப முடிவு திகதிக்கு பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பதிவாளர்