Notices

மீள்பரீட்சைகள் (விசேட பரீட்சை) – கலைப்பீடம்

கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
முதலாம் மட்டம் இரண்டாம் அரையாண்டு
இரண்டாம் மட்டம் இரண்டாம் அரையாண்டு
மீள்பரீட்சைகள் (விசேட பரீட்சை)

BMEN 12013 – Basic Mathematics

BSEN 22013 – Basic Statistics

  • மேற்படி பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கலைப்பீட மாணவர்களிடமிருந்து 10.08.2026 முதல் கலைப்பீடாதிபதி அலுவலகத்தினால் விநியோகிக்கப்படும்.
  • விண்ணப்பங்களை கலைப்பீடாதிபதி அலுவலகத்திலிருந்து அல்லது கலைப்பீட இணையத்தளத்திலிருந்து பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17.08.2026 அல்லது அதற்கு முன் பீடாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • மீள் பரீட்சார்த்திகள் மற்றும் மருத்துவ காரணங்களால் முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்ற முடியாத அனைவரும் ஒரு பாடஅலகிற்கு மீள் பரீட்சைக் கட்டணமாக ரூபா 250/= வீதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையில் செலுத்தி பற்றுச்சீட்டை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.
  • மக்கள் வங்கிக் கணக்கு இலக்கம்: 480000022100084

விண்ணப்ப முடிவுத்திகதியின் பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்