நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

“தமிழ்த் தூது : அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் நடத்தப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளின் ஒளிப்படக் காட்சிகள்” எனும் தலைப்பில் அமைந்த நூலின் வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம சபைக் கூடத்தில் 10.03.2026 செவ்வாய்க் கிழமை மு.ப 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்நூல் பற்றிய அறிமுகமும் அதன் வெளியீடும் தமிழ்த்துறை சிரேஷ்ட பேராசிரியர். கி. விசாகரூபன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. நூலின் முதற் பிரதியைத்
துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான சி. சிறிசற்குணராசா அவர்கள் திரு. இ. பேரின்பநாயகம் அவர்களுக்கு (நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர், இலங்கைக் கிளை) வழங்கி கௌரவித்தார்.

இந் நிகழ்வில் மறவன்புலவு. க. சச்சிதானந்தன் (நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர், இலங்கைக் கிளை), கலாநிதி. ஆறு திருமுருகன் (முன்னாள் உறுப்பினர், கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியம்), பேராசிரியர். வ. மகேஸ்வரன் (செயலாளர், உலகத் தமிழாராய்ச்சி மன்றம், இலங்கைக் கிளை) ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வின் நிறைவாக, இந்நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான கலாநிதி. மைதிலி விசாகரூபன் (பதில் நூலகர் மற்றும் தமிழியல் நூலகச் செயற்திட்ட இணைப்பாளர்) அவர்களின் ஏற்புரையையும் நன்றி நவிலலும் இடம்பெற்றது. தமிழாராய்ச்சியின் வளர்ச்சி பற்றிய மீள் நோக்கொன்றை இந்நூல் சாட்சியங்களுடன் எதிர்காலச் சந்ததிக்கு வழங்கியுள்ளதாக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சான்றோர் பெருமிதம் தெரிவித்தனர்.